இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
”பாகிஸ்தான் அதன் விரிவான அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் வலிமையிலும் அதன் கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகளின் வலிமையில் முழு நம்பிக்கையுடன் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச சமூகம் இந்தியாவின் அணுசக்தி குறித்தே அதிகம் கவலைப்பட வேண்டுமெனவும், இந்தியாவின் அரசியல், ஊடகம் மற்றும் சமூகப் பிரிவினைகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் தீவிரமையமாக்கலினால், அவர்களது அணுசக்தி தொடர்பான நியாயமான கவலைகளை அதிகரித்துள்ளதாகவும், குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலையும், அவர்களது எல்லையைக் கடந்த பயங்கரவாதத்தையும், இந்தியா ஒருபோது சகித்துக்கொள்ளாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

