• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஹாவர்டு பல்கலை. விவகாரம்: ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை | Harvard University case Court grants interim stay on Trump administration order

GenevaTimes by GenevaTimes
May 24, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ஹாவர்டு பல்கலை. விவகாரம்: ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை | Harvard University case Court grants interim stay on Trump administration order
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு நிலை கேள்விக்குறியானது. இந்த சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹாவர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

பின்னணி என்ன? -அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாவர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹாவர்டு பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

மேலும், ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்தும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.

ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு ட்ரம்ப் அரசு கூறியதற்கு, பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்தே, அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சென்று கொண்டிருந்த அரசின் மானியத்தை நிறுத்தியுள்ளது ட்ரம்ப் அரசு. தற்போது ஹாவர்டில் தங்கி பயின்று வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு 72 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹாவர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருப்பதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே இந்த வெளிநாட்டு மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர தடையை ட்ரம்ப் அரசு விதித்தது.

இந்த பல்கலைக்கழகத்தில், இந்த செமஸ்டரோடு படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகும் பயில வேண்டிய மாணவர்கள் கட்டாயம் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், அவர்கள் அமெரிக்காவில் தங்கி படிக்கும் உரிமையை இழப்பார்கள் என்றும் ட்ரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், இந்த ஆண்டு புதிய மாணவர்கள் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் வந்து சேர முடியாதவாறு, வெளிநாட்டு மாணவர்கள் சேரும் பல்கலைக்கழகப் பட்டியலில் இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரை அமெரிக்க அரசு நீக்கியது.

ஒருவேளை, அரசின் சட்டத் திட்டத்துக்கு அடுத்த 72 மணிநேரத்திற்குள், ஹாவர்டு பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டால், அது முன்பு போலவே இயங்கலாம் என்று கூறப்பட்டது.



Read More

Previous Post

Gold Rate: வாரஇறுதி நாளில் உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Next Post

அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு : தமிழர் பகுதியில் சம்பவம்

Next Post
அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு : தமிழர் பகுதியில் சம்பவம்

அதிபர், ஆசிரியர் மீது வாள் வெட்டு : தமிழர் பகுதியில் சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin