• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் முடிவிற்கு வரும் டோல் கேட் முறை

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் முடிவிற்கு வரும் டோல் கேட் முறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சிகள் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் உறுதி செய்துள்ளார்.

டோல்கேட் சிஸ்டமிற்கு பதிலாக இந்தியாவில் விரைவில் ஒரு புதிய டோல் வசூல் முறை அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய முறை மூலம் வழக்கமான சுங்க சாவடிகள் தேவையற்றதாக மாறும். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சாட்டிலைட் பேஸ்ட் டோல் சிஸ்டம் நாட்டில் அமலுக்கு வர உள்ளதாக கூறி இருக்கிறார். செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண வசூல் முறையில் GPS மற்றும் கேமரா மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது சமீபத்திய சோஷியல் மீடியா போஸ்ட்டில், தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக GPS அடிப்படையிலான கட்டண வசூல் முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வசூல் முறையில் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணம் நேரடியாக கழிக்கப்படும், மேலும் டோல் இருக்கும் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தகவல்கள் அனைத்தும் ஜிபிஎஸ் மூலம் சேகரிக்கப்படும். இதன் மூலம் பணத்தையும் சேமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது, வாகனம் செல்லும் தூரத்தை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு டோல் பிளாசாவிலும் குறிப்பிட்ட அளவிலான சுங்கக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

News18

இந்த கட்டண முறையை விரைவில் நாட்டில் தொடங்க அரசு தயாராகி வருகிறது. இதற்கிடையே நிதின் கட்கரி கடந்த டிசம்பர் தொடக்கத்தில் NHAI மார்ச் 2024-க்குள் இந்த புதிய கட்டண முறையை செயல்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். தற்போது இந்த புதிய ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை முறையாக அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்கும் ஒரு சோதனை நடந்து வருகிறது.

இந்த சூழலில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த புதிய சுங்க கட்டண முறையை அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய சுங்க வரி முறையானது பயனர்களின் நேரத்தையும், எரிபொருளையும் எவ்வாறு மிச்சப்படுத்தும் என்பதை விளக்கியுள்ளார். முன்பு மும்பையில் இருந்து புனே செல்ல 9 மணி நேரம் ஆகும். இப்போது இந்த பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 7 மணி நேர பயணம் மற்றும் அதற்கு செலவாகும் டீசல் சேமிக்கப்படும்.

விளம்பரம்

News18

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான துாரத்திற்கு மட்டுமே வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடைமுறை உதவும் என்றார். இந்த புதிய முறையின் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே 2 இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே கட்கரி கூறியிருந்தார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்கள் தற்போது FASTag எனப்படும் RFID டெக்னலாஜி மூலம் டோல் கட்டணத்தைக் கழிக்கின்றன.

Also Read : வருமான வரியில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்… இன்று முதல் புதிய நிதி ஆண்டு!!!

விளம்பரம்

கடந்த பிப்ரவரி 15, 2021 முதல் கட்டாயக் கட்டண வசூல் முறையாக இது அமல்படுத்தப்பட்டது. RFID-இயக்கப்பட்ட தடையுடன் கூடிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் கழிக்கப்படும். டோல் கேட்டில் இருக்கும் பேரியர்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், வாகனங்களின் FASTag ஐடி-க்களை ரீட் செய்து மற்றும் முந்தைய டோல் பிளாசாவிலிருந்து தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை வசூலிக்கும்.

இதனிடையே வரவிருக்கும் GPS அடிப்படையிலான சுங்கக் கட்டண முறை, ஒவ்வொரு வாகனமும் பயணிக்கும் தூரம் குறித்த ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல்களை பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் என்பதால் இனி சுங்க கட்டணம் நியாயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பு… – News18 தமிழ்

Next Post

லஹாட் டத்துவில் மாணவனைக் கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Next Post
லஹாட் டத்துவில் மாணவனைக் கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

லஹாட் டத்துவில் மாணவனைக் கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin