பின்னணியும் சர்ச்சையும்
சைவம், வைணவம் சமயங்கள் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அமைச்சர் பதவியும் பறிபோனது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கட்சி நிகழ்வுகளில் அவரது பெயர் மற்றும் புகைப்படம் தவிர்க்கப்படுவது, அவரை முற்றிலும் புறக்கணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொன்முடியின் பெயர் பேனர்களில் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

