• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Foreign worker death in Singapore: சிங்கப்பூர், யுஷூனில் (Yishun) இன்று (மே 23) வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பின்னோக்கிச் சென்ற டிப்பர் லாரி மோதியதில் 29 வயதுமிக்க அந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார் என கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் புளாக்கில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாப மரணம் – மன அழுத்தம் காரணமா?

சம்பவம் நடந்த நேரத்தில் அவர், 71 லோரோங் செஞ்சாருவில் உள்ள HDB கழக வீட்டில் திட்ட தளத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று காலை 10.05 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. பின்னர், அங்கு வருகை தந்த துணை மருத்துவர்கள் ஊழியரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இந்த மரணத்தால் வருத்தமடைந்துள்ளதாக கூறிய HDB கழகம், அந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக சொன்னது.

மேலும் இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரருடன் இணைந்து அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க பணியாற்றிவருவதாக HDB தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ஊழியர், 29 வயதுமிக்கவர் என்றும் அவர் சொந்த நாடு பங்களாதேஷ் என்றும் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, அனைத்து வேலையிடங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அதன் கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் HDB குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இந்த வாரத்தில் மட்டும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மரணித்துள்ளனர், கடந்த மே 20 ஆம் தேதி அன்று அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் என்றும், சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வேலையிட விபத்தில் உயிரி*ழந்த வெளிநாட்டு ஊழியர்… சக ஊழியரின் பேச்சை கேட்கவில்லை

லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை

Read More

Previous Post

“ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்” – டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் | Trump threatens Apple with 25% tariffs if iPhone assembly doesn’t move to U.S.

Next Post

தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

Next Post
தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin