ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வதும் அவசியம். சரியான கவரேஜை பெற்று எதிர்காலத்தில் தேவையற்ற தலைவலிகளில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒரு சில முக்கியமான தவறுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். கூடுதலாக உங்கள் இன்சூரரிடம் புகார் செயல்முறையை எப்படி அணுகுவது என்பது குறித்து சில தகவல்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான தவறுகள் சில:
பாலிசி விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொள்ளாமல் இருத்தல்: உங்களுக்கு வழங்கக்கூடிய பாலிசி ஆவணத்தில் உள்ள காத்திருப்பு காலங்கள், எந்தெந்த விஷயங்களுக்கு காப்பீடு வழங்கப்படாது மற்றும் கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறைகள் போன்றவற்றை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும். விதிகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள ஒரு சில தகவல்களை தவறவிடுவதனால் ஏராளமான தவறான புரிதல்கள் ஏற்படலாம். மேலும் கிளைம் செயல்முறையின் பொழுது எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.
ஒப்பிட்டு பார்க்காமல் மலிவான பாலிசியை வாங்குதல்:
நம்மால் இயன்ற பாலிசியை வாங்குவது அத்தியாவசியமானது என்றாலும் கூட முழுக்க முழுக்க ப்ரீமியம் செலவின் அடிப்படையில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது ஒரு மிகப்பெரிய தவறு. மலிவான பாலிசிகளில் போதுமான அளவு காப்பீடு வழங்கப்படாமல் போகலாம். எனவே காப்பீடு, நெட்வொர்க் மருத்துவமனைகள், கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் மற்றும் கஸ்டமர் சேவை போன்ற விஷயங்களை பல்வேறு பாலிசிகள் இடையே ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்.
முன்கூட்டியே இருக்கக்கூடிய நோய்கள் பற்றி வெளிப்படையாக கூறாமல் இருப்பது:
ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய்கள் இருக்கும் பட்சத்தில் பாலிசி வாங்கும்பொழுது அதனை கட்டாயமாக நீங்கள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யத் தவறினால் உங்களுடைய கிளைம் நிராகரிக்கப்படலாம். மேலும் ஒரு சில பாலிசிகள் சில சிகிச்சைகளுக்கு நீண்ட காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன. எனவே அது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நெட்வொர்க் மருத்துவமனைகளை தவிர்த்தல்:
பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையே வழங்குகின்றன. எனவே பாலிசியை வாங்கும் பொழுது நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலில் உங்கள் வீட்டிற்கு அருகில் மருத்துவமனைகள் இருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.
பாலிசி ரின்யூவலுக்கான விதிகளை கவனிக்காமல் இருப்பது:
பல பாலிசிதாரர்கள் அவர்களது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான ரின்யூவல் விதிகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர். ஆனால் உண்மையில் பிரீமியம் மாற்றங்கள், காப்பீடு மாற்றங்கள் மற்றும் ஏதேனும் புதிய விலக்குகள் இருக்கிறதா என்பதை ரின்யூவல் விதிகளில் கட்டாயமாக பார்க்க வேண்டும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் பொழுது மேலே கூறப்பட்ட இந்த தவறுகளை தவிர்ப்பது உங்களுக்கு தேவையற்ற பண செலவுகளையும், அலச்சலையும் தவிர்ப்பதற்கு உதவும்.
இன்சூரன்ஸ் நிறுவனம் மீதான புகார்
ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கான புகார் செயல்முறை இரண்டு படி அமைப்பு கொண்டது:
நிலை 1: இன்சூரன்ஸ் நிறுவனத்தை நாடுவது
புகாரை தாக்கல் செய்தல்: உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனரின் கிரீவன்ஸ் ரீடிரசல் செல்லில் (grievance redressal cell) ஒரு புகாரை தாக்கல் செய்யவும்.
Also Read |
குடும்பத்திற்கு ஒரே மகளா? மத்திய அரசின் மாதம் ரூ.35,000 வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா? தகுதி என்ன?
தேவையான ஆவணங்களுடன் அதனை நீங்கள் எழுத்துப்பூர்வமான புகாராகவோ அல்லது கஸ்டமர் கேர் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் புகார் சம்பந்தப்பட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்த புகாரை இன்சூரர் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தீர்த்து வைக்க வேண்டும் (பொதுவாக இது 15 நாட்களாக உள்ளது).
நிலை 2: IRDA க்கு அனுபப்படுகிறது (திருப்தி அடையாத பட்சத்தில்)
இன்சூரரின் பதில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத பட்சத்தில் உங்களது புகாரை நீங்கள் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (IRDA) இடம் கொண்டு செல்லலாம்.
இதற்கு நீங்கள் IRDA போர்ட்டலின் பீமா பரோசா அமைப்புக்கு பின்வரும் முகவரி மூலமாக செல்லலாம் (https://irdai.gov.in/grievance-redressal-mechanism1)
complaints@irdai.gov.in. என்ற ஐடிக்கு இமெயில் அனுப்பலாம்.
155255 or 1800 4254 732 என்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.
முழு விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் உங்கள் புகாரை பதிவு செய்யுங்கள். IRDA இதனை உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
