• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார் | PM Modi inaugurates 103 Amrit Bharat railway stations

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார் | PM Modi inaugurates 103 Amrit Bharat railway stations
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார்.

இந்​தி​யா​வில் நாள்​தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்​டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்​களில் பயணம் மேற்​கொள்​கின்​றனர். இதை கருத்​தில் கொண்டு ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.

இந்த திட்​டத்​தின் கீழ் நாடு முழு​வதும் 1,318 ரயில் நிலை​யங்​களை உலகத் தரத்துக்கு உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக கடந்த 2023-ம் ஆண்​டில் 58 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்​தில் மேம்​படுத்​தப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து இரண்​டாம் கட்​ட​மாக நாடு முழு​வதும் 553 ரயில் நிலை​யங்​களை புதுப்​பிக்​கும் திட்​டத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி 26-ம் தேதி அடிக்​கல் நாட்​டி​னார். இதில் 103 அமிர்த ரயில் நிலை​யங்​கள் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன. ராஜஸ்​தானின் தேஷ்நோக் ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்ற விழா​வில் 103 ரயில் நிலை​யங்​களை​யும் பிரதமர் மோடி காணொலி வாயி​லாக தொடங்​கி​வைத்​தார்.

இதன்​படி உத்தர பிரதேசத்​தில் 19, குஜ​ராத்​தில் 16, மகா​ராஷ்டி​ரா​வில் 15, தமிழ்​நாட்​டில் 9, ராஜஸ்​தானில் 8, மத்​திய பிரதேசத்​தில் 6, கர்​நாட​கா​வில் 5, சத்​தீஸ்​கரில் 5, தெலங்​கா​னா​வில் 3, மேற்​கு​வங்​கத்​தில் 3, ஜார்க்​கண்​டில் 3, கேரளா​வில் 2, பிஹாரில் 2, புதுச்​சேரி, இமாச்சலபிரதேசம், அசாம், ஹரி​யா​னா​வில் தலா 1 உட்பட மொத்​தம் 103 ரயில் நிலை​யங்​கள் உலகத் தரத்​தில் புதுப்​பிக்​கப்​பட்டு உள்​ளன.

இந்த ரயில் நிலை​யங்​களில் மின் தூக்​கி​கள், நகரும் படிக்​கட்​டு​கள், இலவச வைபை, நவீன மின்​னணு தகவல் பலகைகள், கூடு​தல் வசதி​களு​டன்​கூடிய காத்​திருக்​கும் அறை, சுத்​த​மான குடிநீர், சுகா​தா​ர​மான கழிப்​பறை​கள், பேருந்​து, மெட்ரோ ரயில் சேவை​களை ஒன்​றிணைக்​கும் வசதி, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான வசதி, பார்​வையற்​றோருக்​கான நடை​பாதை, விசால​மான பார்க்​கிங் வசதி உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

தேஷ்நோக் ரயில் நிலை​யத்​தில் பள்ளி மாணவ, மாணவி​களு​டன் பிரதமர் நரேந்​திர மோடி சிறிது நேரம் கலந்​துரை​யாடி​னார். அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த கண்​காட்​சி​யை​யும் அவர் பார்​வை​யிட்​டார்​. முன்​ன​தாக கர்​னி தேவி கோயி​லில்​ அவர்​ வழிபாடு நடத்தினார்.

தமிழகத்தில்… தமிழகத்தில் பணிகள் நிறைவடைந்த 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.பரங்​கிமலை ரயில் நிலை​யம் ரூ.11.05 கோடி​யிலும், சாமல்​பட்டி நிலை​யம் ரூ.8 கோடி​யிலும், ரங்​கம் ரயில் நிலை​யம் ரூ.6.77 கோடி​யிலும், திரு​வண்​ணா​மலை ரயில் நிலை​யம் ரூ.8.27 கோடி​யிலும், போளூர் ரயில் நிலை​யம் ரூ.6.15 கோடி​யிலும் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அதே​போல், சிதம்​பரம் ரயில் நிலை​யம் ரூ.5.96 கோடி​யிலும், விருத்​தாசலம் ரயில் நிலை​யம் ரூ.9.17 கோடி​யிலும், மன்​னார்​குடி ரயில் நிலை​யம் ரூ.4.69 கோடி மதிப்​பிலும், குழித்​துறை ரயில் நிலை​யம் ரூ.5.35 கோடி​யிலும் மேம்​பாட்​டுப்​ பணி​கள்​ நிறைவடைந்​துள்​ளன. பரங்​கிமலை ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்​து​கொண்டார். அவர் பேசுகையில், “மும்பை – அகம​தா​பாத்​துக்கு புல்​லட் ரயில் விரை​வில் வர உள்​ளது. சென்னை ஐசிஎஃப்​-ல் தயாரிக்​கப்​படும் ரயில், இந்​தியா மட்​டுமல்ல உலகம் முழு​வதும் பயன்​படுத்​தப்​படு​கிறது. முன்பு நாம் இறக்​குமதி செய்து கொண்​டிருந்​தோம். தற்​போது, ரூ.50,000 கோடிக்கு மேல் பாது​காப்பு பொருட்​களை ஏற்​றுமதி செய்​கிறோம். இது​தான் புதிய பாரதம்” என்றார்.இந்​நிகழ்ச்​சி​யில், பொது​மேலா​ளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட கூடு​தல் மேலா​ளர் தேஜ்பிர​தாப் சிங் தொழில​திபர் நல்லி குப்​பு​சாமி உட்பட பலர் கலந்​து​கொண்​டனர்.



Read More

Previous Post

ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

Tamilmirror Online || நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?

Next Post
Tamilmirror Online || நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?

Tamilmirror Online || நீர் கட்டணம் எப்போது உயர்த்தப்படும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin