Last Updated:
ஒவ்வொரு 500 ரூபாய் கட்டுகளுக்கும் மேல் மற்றும் அடிப்புறத்தில் மட்டும் 500 ரூபாய் ஒரிஜினல் தாள் வைக்கப்பட்டு உள்ளே கள்ள ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன
3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவை அச்சு அசல் ஒரிஜினல் 500 ரூபாய் போன்று தோற்றமளித்தது பறிமுதல் செய்த போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பல்வேறு குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு நேர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரவு ரோந்து பணிகள் நடத்தப்படுகிறது. இதில் காவல்துறை முக்கிய அதிகாரிகளின் தலைமையில் 4 முதல் 8 குழுக்கள் பிரிக்கப்பட்டு இரவு நேர ரோந்து பணிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் செவ்வாய் அன்று ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் டெல்லி பதிவு எண்ணுடன் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்தது, இதையடுத்து அந்த காரை மடக்கிய சூரத் போலீசார் அதில் சோதனை செய்தனர்.
அப்போது கட்டு கட்டாக 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு 500 ரூபாய் கட்டுகளுக்கும் மேல் மற்றும் அடிப்புறத்தில் மட்டும் 500 ரூபாய் ஒரிஜினல் தாள் வைக்கப்பட்டு உள்ளே கள்ள ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தானை கள்ள நோட்டு கும்பல் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
உள்ளூரை சேர்ந்த ஏஜென்ட் மன்சூரி என்பவரது உதவியோடு வெளி மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் கள்ள நோட்டுகளை கொண்டு வந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


