Last Updated:
லீக் சுற்றுகளின் அடிப்படையில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
18 புள்ளிகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணி இன்று லக்னோவுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று நடக்க இருக்கும் 64ஆவது லீக் போட்டியில் குஜராத் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இதுவரை தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 9 போட்டிகளில் வென்று 18 புள்ளிகளுடன் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
விளையாடிய 12-ல் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள லக்னோ அணி, புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தை பெற்று தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.
இன்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றாலும் அது குஜராத் அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதற்காக குஜராத் அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ரூ. 27 கோடி கொடுத்து வாங்கப்பட்ட அதிக மதிப்பு மிக்க வீரராக ரிஷப் பந்த் உள்ளார். அவர் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அடுத்த 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றால் புதிய உத்வேகத்துடன் அடுத்த ஐபிஎல்லை எதிர்கொள்ளும். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இரு அணிகளும் மோதும் போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
லீக் சுற்றுகளின் அடிப்படையில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.


