Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்திற்காக கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றது. 7 குழுக்களில் ஒன்றான இக்குழு 5 நாடுகளுக்குச் செல்கின்றது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா ஆகிய 5 நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து கனிமொழி தலைமையிலான குழுவினர் ரஷ்யாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதாக கூறினார்.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஷா தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆலோசனை நடத்தினர். ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்த எம்.பி.க்கள், அந்நாட்டு அதிகாரிகளிடம் விளக்கம் அளிப்பது குறித்து கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து டோக்கியோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் இந்திய எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.
Delhi Cantonment,New Delhi,Delhi
May 22, 2025 11:29 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: விளக்கமளிக்க கனிமொழி எம்.பி தலைமையிலான குழு இன்று ரஷ்யாவிற்கு பயணம்!


