Last Updated:
இன்றைய மேட்ச்சில் டெல்லி வெற்றி பெற்றால் 15 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை வெற்றி பெற்று விட்டால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளில் ஒவ்வொரு அணிகளும் பெற்ற பாயிண்டுகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
நான்காவது எந்த அணி முன்னேறும் என்பதில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மீதமுள்ள 5 அணிகளும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறி விட்டன. இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
மும்பை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மும்பை அணி 14 புள்ளிகளும் டெல்லி அணி 13 புள்ளிகளும் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்து விடும்.
டெல்லி வெற்றி பெற்றால் 15 புள்ளிகளுடன் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும். இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கு மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் விறுவிறுப்பான மேட்ச் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2025 Playoffs Scenario : ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4-ஆவது அணி எது? மும்பை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை


