இதற்கு உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன், அப்ளிகேஷன் அல்லது மொபைல் டேட்டா போன்ற எதுவுமே தேவையில்லை. ஒரு சில எளிமையான படிகளை பின்பற்றினாலே EPFO சப்ஸ்கிரைபர்கள் தங்களுடைய PF அக்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதற்கு உங்களிடம் ஒரு அடிப்படை மொபைல் போன் இருந்தாலே போதுமானது.
PF பேலன்ஸ் தெரிந்துகொள்ள மிஸ்டு கால் வசதி:
உங்களுடைய PF பேலன்ஸை தெரிந்துகொள்வதற்கான மிகவும் எளிமையான வழிகளில் ஒன்று இந்த மிஸ்டு கால் சேவை.
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.
ஒரு சில ரிங்குகளுக்கு பிறகு போன் கால் ஆட்டோமேட்டிக்காக துண்டிக்கப்படும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தற்போதைய PF பேலன்ஸ், சமீபத்திய பங்களிப்பு விவரங்கள் போன்றவை அடங்கிய ஒரு SMS-ஐ பெறுவீர்கள்.
இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு பின்வரும் விஷயங்களை உறுதி செய்யவும்:
உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆக்டிவாக இருப்பது அவசியம்.
உங்களுடைய மொபைல் நம்பர் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதார், PAN அல்லது வங்கிக் கணக்கு போன்ற ஏதாவது ஒரு KYC ஆவணமாவது அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த சேவை என்பது இலவசமானது மற்றும் இதனை அடிப்படையான மொபைல் போன்கள் மூலமாகவே பயன்படுத்தலாம்.
SMS மூலமாக PF பேலன்ஸ் விவரத்தை தெரிந்து கொள்ளுதல்:
PF பேலன்ஸ் தெரிந்து கொள்வதற்கு EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
பின்னர் உங்களுடைய பேலன்ஸ், கடைசியாக செய்த பங்களிப்புகள் மற்றும் KYC ஸ்டேட்டஸ் போன்ற விவரங்கள் அடங்கிய ஒரு SMS-ஐ பெறுவீர்கள்.
ஒருவேளை இந்த மெசேஜை நீங்கள் உங்களுடைய வட்டார மொழியில் பெறுவதற்கு விருப்பப்பட்டால், உங்களுடைய மொழியின் முதல் 3 எழுத்துக்களை மெசேஜில் ஒரு ஸ்பேஸ் கொடுத்து இறுதியாக சேர்த்துக் கொள்ளவும்.
உதாரணமாக, மெசேஜை தமிழில் பெறுவதற்கு EPFOHO UAN TAM என்று அனுப்ப வேண்டும்.
KYC அப்டேட் செய்து UAN ஆக்டிவேட் செய்வதற்கான படிகள்:
UAN ஆக்டிவேட் செய்வதற்கு:
EPFO மெம்பர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
அங்கு ‘ஆக்டிவேட் UAN’ என்பதை கிளிக் செய்து, உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், UAN போன்ற விவரங்களை என்டர் செய்யவும்.
OTP சரிபார்ப்பு முறையை நிறைவு செய்து, ஒரு பாஸ்வோர்டை அமைக்கவும்.
KYC-ஐ அப்டேட் செய்ய:
EPFO போர்ட்டலுக்கு லாகின் செய்யவும்.
மேனேஜ் > KYC என்பதற்கு செல்லுங்கள்.
இங்கு உங்களுடைய ஆதார், PAN அல்லது வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை சேர்க்கவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியும்.
விவரங்களை சமர்ப்பித்து, நிறுவனத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு காத்திருங்கள்.
இந்த வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக தங்களுடைய ஓய்வுகால சேமிப்புகளை இன்டர்நெட் இல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம். EPF பேலன்ஸை அவ்வப்போது கண்காணிப்பது சிறந்த பொருளாதார திட்டமிடலுக்கு உதவும். மேலும், பங்களிப்புகளில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும் பட்சத்தில் அதனை சரி செய்வதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது.
Read More