Indian driver death in Singapore: சிங்கப்பூரில் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மே20 ஆம் தேதி காலை, பூன் லே அவென்யூவின் உள்ள 186வது புளாக்கில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் என்றும், சிங்கப்பூரில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இரு பிள்ளைகளுக்கு தந்தை
அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்றும் இறந்தவரின் சக ஊழியர் தகவல் கூறினார்.
ஊழியர் கீழே விழுந்தபோது, 17வது மாடியின் ஜன்னல் பலகையிலும், மேலும் 16வது மாடியின் ரேக்கிலும் மோதியிருக்கலாம் என்று அங்கிருந்த குடியிருப்பாளர் ஊகித்தார்.
ஜன்னல், மரக்கிளை, டாக்ஸி மீது விழுந்து மரணம்
பின்னர் மரத்தில் மோதி, மரக் கிளை முறிந்து அதோடு சேர்ந்து கார் மற்றும் டாக்ஸி மீது அவர் விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கார் நிறுத்துமிடத்தில் டாக்ஸி மற்றும் காருக்கும் இடையில் ஊழியர் ரத்த வெள்ளத்துடன் கிடப்பதைக் கண்டதாக HDB கழக வீட்டில் வாசகர் ஒருவர் கூறினார்.
இதில் டாக்ஸியின் இடது பின்புறக் கதவு, காரின் கூரை மற்றும் காரின் பின்புற கண்ணாடி சேதமடைந்திருந்தது.
சிங்கப்பூரில் இந்தியருக்கு 3 மாத சிறை தண்டனை
சதிச்செயல் ஏதும் இல்லை
பின்னர், தகவலறிந்த போலீசார் மற்றும் SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதித்ததில் அவர் இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவ அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மரணத்தில் சதிச்செயல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ மன அழுத்தம் இருந்தால், உதவி மற்றும் ஆலோசனை கேட்க நீங்கள் அழைக்கக்கூடிய சில உதவி எண்கள்:
- 1-767
- 1800-283-7019
- 6389-2222 (24 hours)

