பட்டியலிடப்பட்ட பிரிவுகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் பொருந்தும். PMAY வெப்சைட்டில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தரவின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 92.61 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம்: தகுதி வரம்பு
தங்குவதற்கு சரியான வீடு இல்லாத 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள் மற்றும் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் பெறக்கூடிய நபர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள். மேலும், 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறக்கூடிய, தங்குவதற்கு சரியான வீடு இல்லாத குடும்பங்களும் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம். கூடுதலாக சேரி அல்லது குடிசைப் பகுதியில் இருப்பவர்களும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம்: தகுதி வரம்பு
தங்குவதற்கு வீடு இல்லாத அல்லது குடிசையில் வாழக்கூடிய SECC தரவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் தகுதி பெறுகிறார்கள். எனினும், ஒரு சில பிரிவுகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாது. தங்குவதற்கு நல்ல வீடு, மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர் அல்லது விவசாய உபகரணம் வைத்திருப்பவர்கள் அல்லது 50,000 அல்லது அதற்கும் அதிகமான உச்சவரம்பு கொண்ட ஒரு கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிரிட்ஜ், லேண்ட்லைன் அல்லது பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம்: தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும். விண்ணப்பிப்பவர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் அட்டைகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள், வருமானத்திற்கான நிரூபணம், நில உரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்கள்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம்: தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் பல்வேறு ஆவணங்களை வழங்க வேண்டும். அதில் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், ஸ்வச் பாரத் மிஷன் (SHM) நம்பர் மற்றும் MGNREGA வேலை அட்டை போன்றவை அடங்கும். கூடுதலாக தங்குவதற்கு சரியான வீடு இல்லை என்பதற்கான ஒரு ஆவணமும் தேவைப்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் ஆன்லைன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா… தகுதி வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த விரிவான தகவல்கள்…

