Last Updated:
வக்ஃப் சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை அபகரிக்கும் திட்டம் என்று கபில் சிபல் வாதம். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காரசார வாதங்களுக்கு பிறகு வக்ஃப் வாரிய சட்டத்தின் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்தார். வக்ஃப் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 3 டி மற்றும் 3 ஈ பிரிவுகள் நாடாளுமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்கள் முன்பு சேர்க்கப்பட்டது என்று வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதிகள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவில்லையா என்று கேள்வி எழுப்பினர். வக்ஃப் சட்டம் என்பது இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம் என்றும், இதற்கு எதிராக நீதிமன்றங்களில் முறையிடவும் முடியாது என்று கபில் சிபல் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு தொடரும் உரிமை பறிக்கப்படுவது அரசியலமைப்பு பிரிவு 14 ஐ மீறும் செயல் என்றும் கபில் சிபல் வாதிட்டார். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன்வைத்தார்.
அதில் 28 மாநிலங்களில் 5 மாநிலங்களில் மட்டுமே வக்ஃப் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றார். இது ஒன்றிய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


