• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : சென்னை அணிக்கு 10-ஆவது தோல்வி.. 6 விக். வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : சென்னை அணிக்கு 10-ஆவது தோல்வி.. 6 விக். வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2025 11:27 PM IST

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்றி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

வைபவ் சூர்யவன்ஷிவைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சென்னை அணிக்க இது 10 ஆவது தோல்வி என்பது கவனிக்கத்தக்கது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினர்.

2 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் டெவோன் கான்வே 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த உர்வில் படேல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் 13 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 1 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் இணைந்த ஆயுஷ் மாத்ரே – டெவால்ட் ப்ரூவிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.

விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 1 சிக்சர் 8 பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ப்ரூவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.  தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்றி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

19 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனுடன் – வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 41 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யவன்ஷி 33 பந்துகளில் 4 சிக்சர் 4 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

துருவ் ஜுரெல் 31 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மேயர் 12 ரன்களும் சேர்க்க 17.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி பெற்றுள்ள 10 ஆவது தோல்வி இது என்பது கவனிக்கத்தக்கது.

First Published :

May 20, 2025 11:27 PM IST

Read More

Previous Post

யூடியூபர் ஜோதியிடம் என்ஐஏ, ஐபி அதிதீவிர விசாரணை: அதிகாரிகள் சொல்வது என்ன? | NIA and IB grilling Haryana YouTuber Jyoti Malhotra arrested for spying for Pakistan

Next Post

ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு | Covid-19 returns: 257 cases reported, 2 dead in Mumbai

Next Post
ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு | Covid-19 returns: 257 cases reported, 2 dead in Mumbai

ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு | Covid-19 returns: 257 cases reported, 2 dead in Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin