Last Updated:
சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ரன் ரேட் குறையாத அளவுக்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 188 ரன்களை சென்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினர்.
2 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் டெவோன் கான்வே 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த உர்வில் படேல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் 13 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 1 ரன்னும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் இணைந்த ஆயுஷ் மாத்ரே – டெவால்ட் ப்ரூவிஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.
விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஆயுஷ் மாத்ரே 20 பந்துகளில் 1 சிக்சர் 8 பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ப்ரூவிஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 32 பந்துகளில் 39 ரன்களும், தோனி 17 பந்துகளில் 16 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 187 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடவுள்ளனர்.


