• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : முக்கிய வீரரை இழந்த சிஎஸ்கே.. கடைசி 2 போட்டிகளில் பின்னடைவு ஏற்படுமா?

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 : முக்கிய வீரரை இழந்த சிஎஸ்கே.. கடைசி 2 போட்டிகளில் பின்னடைவு ஏற்படுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 20, 2025 7:58 PM IST

12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.

சென்னை அணிசென்னை அணி
சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்த முக்கிய வீரர் ஒருவர் அணியில் இணையவில்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இந்த போட்டியில் முதல் அணியாக சென்னை வெளியேறியது. தற்போது 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே வெறும் 6 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அவற்றின் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சுமார் 8 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், ஏற்கனவே தங்களது தேசிய அணியில் மற்ற போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், சென்னை அணியில் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து சேர்ந்த சாம் கரன் அணியில் இணையவில்லை.

ஏற்கனவே பல போட்டிகள் முடிவு பெற்று சென்னை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், சாம் கரனுக்கு மாற்று வீரர் யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று சென்னை அணி தெரிவித்துள்ளது.

இதேபோன்று சச்சின் ரவீந்திரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சென்னை அணியில் இணையவில்லை. இது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் தரவரிசை பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கது.

Read More

Previous Post

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி

Next Post

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு | Power Generation at Mettur Thermal Power Plant Reduced Due to Increase on Wind Power Generation

Next Post
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு | Power Generation at Mettur Thermal Power Plant Reduced Due to Increase on Wind Power Generation

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு | Power Generation at Mettur Thermal Power Plant Reduced Due to Increase on Wind Power Generation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin