இந்நிலையில் இந்திய – பாகிஸ்தான் மோதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்திய ராணுவம் பாரமுல்லாவின் உரி பகுதியில் இன்று இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இதேபோன்று குப்வாரா, உரி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய ராணுவம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தினர் அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருந்துகளை வழங்குகின்றனர்.
முன்னதாக இந்திய ராணுவத்தினர் பல பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

