Last Updated:
மனக்கட்டுப்பாடுடன் செயல்படும்போது உங்களால் சாத்தியம் இல்லாததையும் நடைமுறைப்படுத்த முடியும்.
ஜனவரி மாதத்திலிருந்து மது அருந்தவில்லை என்று சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ளார். தேசிய அணிக்காக விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் விளையாடுவதை தவிர்த்தார்.
பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்த்து விட்டார்.
கடந்த டிசம்பரில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் அறுவை செய்து கொண்டு, நீண்ட ஓய்வுக்கு பின்னர் கம் பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
வீரர்கள் வாழ்வில் காயங்கள் என்பது தவிர்க்க முடியாதது. காயங்கள் என்பவரை விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். இருப்பினும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் காயங்கள் தொழில்முறை விளையாட்டையும் பாதிக்கும்.
நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட காயம் எனக்கு பின்னடைவை கொடுத்தது. அதிலிருந்து மீள்வதற்கு நான் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியிருந்தது. எனது வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு மன கட்டுப்பாட்டுடன் இருந்தேனா என்று எனக்கு தெரியவில்லை.
அது என்னவென்றால் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து நான் மதுபானம் அருந்தாமல் இந்து வருகிறேன். குறைந்தது நான் களத்தில் விளையாடும் வரையிலாவது இந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
கடினமாக உழைத்தால் எந்தவொரு பின்னடைவில் இருந்தும் நீங்கள் கம்பேக் கொடுக்கலாம். மைதானத்தில் ஒர்க் அவுட் முடித்தபின்னர் ஜிம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். மனக்கட்டுப்பாடுடன் செயல்படும்போது உங்களால் சாத்தியம் இல்லாததையும் நடைமுறைப்படுத்த முடியும்.
காயம் எனக்கு பின்னடைவை கொடுத்தாலும் அது எனக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார்.


