• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஓசூர் ஆலை ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் முயற்சி…! ஆலைத் திறனை விரிவுப்படுத்தும் பணி தீவிரம்…

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஓசூர் ஆலை ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் முயற்சி…! ஆலைத் திறனை விரிவுப்படுத்தும் பணி தீவிரம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 7:43 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான Foxconn இந்தியாவில் அதனுடைய முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News18News18
News18

டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் அமைந்திருக்கும் அதன் ஐபோன் உற்பத்தி ஆலைத் திறனை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை முக்கியமான உற்பத்திக் கூடமாக கருதும் ஆப்பிள் நிறுவனம் இந்த முயற்சியின் மூலமாக இரண்டாம் கட்ட மேம்பாட்டு வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

“ஏற்கனவே இருக்கக்கூடிய 50,000 கூடங்களை இரட்டிப்பாக்குவதற்கு டாட்டா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது” என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர பிராடக்ட் அறிமுகப்படுத்தும் விழாவில் இந்த விரிவாக்கம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒரு தீ விபத்து காரணமாக ஓசூரில் விரிவாக்க செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு முன்பு ஓசூர் ஆலையின் திறன் 50,000 கூடங்களை அடைந்திருந்தது. தீ விபத்திற்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சற்று நேரம் எடுத்ததாக கூறப்பட்டது.

இந்தியாவை நோக்கி நகரும் ஆப்பிள் நிறுவனம்:

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக சங்கிலியில் இந்தியா முக்கியப் பங்கு கொண்டுள்ளது என்று ஆப்பிள் CEO டீம் குக் அவர்கள் கூறியதை அடுத்து இந்த விரிவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் காலாண்டில் அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பதை மே 1ம் தேதி அன்று நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்வு ஒன்றில் குக் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் விற்பனையாகும் பெரும்பாலான ஐபேடுகள், மேக், ஆப்பிள் வாட்சுகள் மற்றும் ஏர் பாடுகள் ஆகியவற்றிற்கான உற்பத்தி மூலம் வியட்நாம் நாடாக இருக்கும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனா மீது சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் விநியோக நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதற்கான வேலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

2025-ல் பெகட்ரான் டெக்னாலஜி இந்தியாவின் 60% பங்கை எடுத்துக்கொண்டது. அதற்கு முன்னதாக மார்ச் 2024 கர்நாடகா மாநிலத்தில் உள்ள நார்சபுராவில் விஸ்ட்ரான் இந்தியா ஆபரேஷன்களின் பங்குகளை கைப்பற்றியது. இதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் முக்கியமான பெரும்பான்மையான பங்கு வகிக்க வேண்டும் என்ற டாடா நிறுவனத்தின் நோக்கம் புரிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான Foxconn இந்தியாவில் அதனுடைய முதலீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிறுவனம் “ஏர் பாட்ஸ்”கள் உற்பத்தியில் கவனம் செலுத்தக்கூடிய மிகப்பெரிய புதிய தொழிற்சாலைகளை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அமைத்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் அதன் செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஓசூர் ஆலை ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் முயற்சி…! ஆலைத் திறனை விரிவுப்படுத்தும் பணி தீவிரம்…

Read More

Previous Post

ரூ.49 கோடியை அள்ளிக் கொடுக்கும் ஐசிசி… வாய்ப்பை இழந்த இந்திய அணி

Next Post

‘RON95 மானியத்தைச் சீரமைத்தல் முழுமையாக நிதி அமைச்சகம் நிர்வகிக்கும்’ – Malaysiakini

Next Post
‘RON95 மானியத்தைச் சீரமைத்தல் முழுமையாக நிதி அமைச்சகம் நிர்வகிக்கும்’ – Malaysiakini

‘RON95 மானியத்தைச் சீரமைத்தல் முழுமையாக நிதி அமைச்சகம் நிர்வகிக்கும்’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin