Last Updated:
அதிக புள்ளிகள் பெற்றிருந்த முதல் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இறுதிப் போட்டிக்கு முன்னேறின
வரலாற்றில் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்பான பரிசுத்தொகையை ஐசிசி அதிகரித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தயாராகி வருகின்றன.
இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகையைக 49 கோடியே 27 லட்ச ரூபாயை ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்த தொடர் புகழ்பெற்ற இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு அதிகமான வாய்ப்புகள் இருந்தன.
ஆனால், உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இதேபோன்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 5 போட்டிகள் கொண்ட மேட்சில் இந்தியாவால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இதையடுத்து, அதிக புள்ளிகள் பெற்றிருந்த முதல் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் இரு அணிகளும் வரும் 11 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுன்றன.
தற்போது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இது முந்தைய போட்டிகளை விடவும் மிகவும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 30 கோடியே 79 லட்ச ரூபாய் பரிசு தொகையை பெறும். தோல்வியடையும் அணி 18 கோடியே 47 லட்ச ரூபாயை பெறுகிறது.
மூன்றாவது இடம் பிடித்திருக்கும் இந்திய அணிக்கு 12 கோடியே 31 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகுவதற்காக தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


