கடனை முன்கூட்டியே செலுத்துங்கள்: வருடாந்திர போனஸ், முதலீட்டு வருமானம் அல்லது வேறு ஏதேனும் எதிர்பாராத வருமானம் உங்களுக்குக் கிடைத்தால், அதை உங்கள் வீட்டுக் கடனில் முன்கூட்டியே செலுத்துங்கள். இப்படி சிறிது சிறிதாக மொத்தமாக முன்கூட்டியே செலுத்துதல், நிலுவையில் உள்ள கடன் தொகையைக் குறைக்கின்றன. மேலும், இது உங்கள் இஎம்ஐ அல்லது கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைக்கிறது. கடன் வழங்கும் முக்கிய வங்கிகள் அனைத்தும் ஃப்ளோட்டர் விகிதக் கடன்களில் முன்கூட்டியே செலுத்தும் அபராதங்களைத் தள்ளுபடி செய்கிறார்கள்.


