Singapore Jobs: சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக நடந்த மோசடியில் சிக்கிய ஆடவர் 3 லட்சம் பணத்தை இழந்துள்ளார், அதோடு மோசடியில் ஈடுபட்ட நபரையும் தஞ்சை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணம்பேட்டை பகுதி பவனமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சசிகுமார் (24), அதே மாவட்டம் மானோஜிபட்டியைச் சேர்ந்த மரிய ஜெபராஜ் (50) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சசிகுமாரிடம் 4 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு ஆக பெரியது – “நன்றி” சொல்ல சிறிய கொண்டாட்டம்
பணத்தை பெற்றுக்கொண்ட ஜெபராஜ் , பாஸ்ப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு சொன்னபடி வேலை எதும் வாங்கித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதை அடுத்து, நான் கொடுத்த 4 லட்சம் பணத்தையும் பாஸ்ப்போர்ட்டையும் திருப்பிக்கொடு என்று சசிகுமார் கேட்க, வெறும் 1 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு 3 லட்சத்தையும், பாஸ்ப்போர்ட்டையும் ஜெபராஜ் திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்பட்டுள்ளது.
3 லட்சத்துக்கான காசோலையை ஜெபராஜ் அவரிடம் கொடுக்க, அதுவும் வங்கியில் இருந்து பணம் இல்லை என திருப்பிவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இறுதியாக விரக்தி அடைந்த சசிகுமார், மருத்துவக்கல்லூரி காவல்நிலையத்தில் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல்துறை, கடந்த வியாழன் (மே 15) அன்று மரிய ஜெபராஜை கைது செய்தது.
இதையும் படிங்க…
லிட்டில் இந்தியாவில் சாலையில் இ*றந்து கிடந்த ஆடவர்: யார் அவர்? – போலீசார் விசாரணை

