Last Updated:
மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பையிலிருந்து இந்திய அணி விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் காரணமாக 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தி தகுந்த பாடம் புகட்டியது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆண்கள் ஆசிய கோப்பையிலிருந்து விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், “இது நாட்டின் உணர்ச்சி என்றும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருக்கும்போது அதில் தங்களால் விளையாட முடியாது” என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், மகளிர் ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து வகையான தொடர்களிலிருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில், இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
May 19, 2025 10:30 AM IST


