Last Updated:
Joe Biden: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு மிகத்தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பணிப்புரிந்தவர் ஜோ பைடன். இவர் பதவியில் இருந்தபோதே இவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது சில வதந்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இவர் சிறுநீரக தொற்று அறிகுறி காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அதை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஜோ பைடனுக்கு சிகிச்சையளிப்பது குறித்து அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Biden says that his mother using windshield wipers to “get literally the oil slick off the window” is “why I and so damn many other people have cancer.” pic.twitter.com/YIoBlZadRJ
— Townhall.com (@townhallcom) July 20, 2022
இந்நிலையில், ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலையடைந்ததாகக் கூறியுள்ள அதிபர் டிரம்ப், அவர் விரைவாக குணமடைய வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல் ஜோ பைடன் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரீஸ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு மிகத்தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Joe Biden: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய்… டெனால்ட் ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

