“சீனாவில் குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால் ஆப்பிள் தொழிற்சாலை சீனாவில் தொடங்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
அது முற்றிலும் தவறு. குறைந்த சம்பளம் என்பதைச் சீனா நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆப்பிள் தொழிற்சாலை சீனாவில் இயங்குவதற்கான முக்கிய காரணம், “இங்கு இருக்கும் திறன்’.
எங்களுக்குக் கருவிகள் தயாரிப்பதிலும், அதைத் துல்லியமாகப் பொருத்தும் மேம்பட்ட திறன் வேண்டும். அது சீனாவில்தான் அதிகம் உள்ளது.
அமெரிக்காவில் இப்படிப்பட்ட நபர்களைக் காண்பது மிகக் கடினம்.
அப்படியே கிடைத்தாலும், ஒரு அறையை நிரப்பும் அளவு கூட ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். ஆனால், சீனாவில் இருக்கும் திறன் வாய்ந்த நபர்களைக் கொண்டு பல கால்பந்து மைதானங்களை நிரப்பலாம்” என்று கூறியிருந்தார்.

