Last Updated:
மெக்சிகோ கடற்படை கப்பல் நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்தில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் கடற்படை கப்பல் ஒன்று நியூயார்க்கின் புரூக்ளின் பாலத்தில் இடிந்ததால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் கடற்படை பயிற்சிக் கப்பல் 277 பேருடன், நியூயார்க்கை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, புரூக்ளின் பாலத்தின் மீது 147 அடி உயர கப்பலின் கொடிக்கம்பம் மோதியது. பாலத்தின் மீது கப்பல் மோதியதில் கப்பலில் பயணித்த 22 பேர் காயமடைந்தனர். அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாலத்தின் மீது கப்பல் மோதியதால் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய கப்பல் கடந்த 1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First Published :
May 18, 2025 11:42 AM IST


