இதுநாள்வரை ஆக்கபூா்வ தேவைகளில் குறிப்பாக, விவசாயம், வானிலை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மட்டுமே இந்தியாவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு ஏதுவாக 2021-ஆம் ஆண்டில் ட்ரோன் விதிகள் உருவாக்கப்பட்டு 2022-இல் ‘ட்ரோன் சக்தி இயக்கம்’ மூலம் அவை மத்திய அரசால் முறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்களில் ட்ரோன் தயாரிப்பு ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள், அவற்றின் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் உருவாகின.

