• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வான் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா… ஓடிசாவில் நடந்த சோதனை வெற்றி

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வான் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா… ஓடிசாவில் நடந்த சோதனை வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 14, 2025 3:38 PM IST

இந்திய ராணுவம் ஒடிசாவில் ‘பார்கவாஸ்த்ரா’ டிரோன் எதிர் அமைப்பை வெற்றிகரமாக சோதித்தது. இது 2.5 கி.மீ தூரத்தில் டிரோன்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தான் அதிகளவிலான டிரோன்களை இந்தியா மீது செலுத்தி தனது தாக்குதலை நடத்தியது. ஆனால், இந்தியா இதனை நம் வான்பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு தகர்த்து எறிந்தது. இதில் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட S 400 பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளும் இந்தத் தாக்குதலில் இருந்து இந்தியாவை காப்பாற்றின.

உலகில் தற்போது இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தால், முதலில் டிரோன்கள் கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், டிரோன்களை வானிலேயே தாக்கி அழிக்கும் கட்டமைப்புகளை நாடுகள் வளர்த்துவருகின்றன. அந்த வகையில், இந்தியா தற்போது டிரோன்களை வானிலேயே வழிமறித்து அழிக்கும் ‘பார்கவாஸ்த்ரா’ அமைப்பை உருவாக்கியுள்ளது.

குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘பார்கவாஸ்த்ரா’ டிரோன் எதிர் அமைப்பு நேற்று ஒடிசாவில் உள்ள கோபால்பூர் சோதனை மையத்தில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ விமான பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நேற்று (13ஆம் தேதி) நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று முதல் நான்கு ராக்கெட்கள் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் வெற்றிகரமாக இருந்தது என்றும் இந்திய ராணுவம் இன்று அறிவித்துள்ளது.

இந்தச் சோதனையில், தனித்தனியே டிரோன்களை அழிக்கும் சோதனையும், குழுவாக டிரோன்களை அழிக்கும் சோதனையும் மேற்கொண்டதாகவும், அதிலும், இரண்டு வினாடிகளில் எதிர் டிரோன்களை கச்சிதமாக இலக்கு வைத்து அழிக்கும் சோதனை வெற்றி பெற்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்கவரும் சிறியவகை டிரோன்களை 2.5 கி.மீ தூரத்திலேயே கண்டறிந்து துல்லியமாகத் தாக்கும் வகையில் இந்த ‘பார்கவாஸ்த்ரா’ வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது சோதனையில் வெற்றி அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location :

Odisha (Orissa)

Read More

Previous Post

அரச வாகன ஏலத்தில் மோசடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு… ‘இந்தியா ஏ’ அணி எப்படி? – ஓர் அலசல் | Karun Nair, Sarfaraz Khan get a chance – How is the India A team

Next Post
கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு… ‘இந்தியா ஏ’ அணி எப்படி? – ஓர் அலசல் | Karun Nair, Sarfaraz Khan get a chance – How is the India A team

கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு... ‘இந்தியா ஏ’ அணி எப்படி? - ஓர் அலசல் | Karun Nair, Sarfaraz Khan get a chance - How is the India A team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin