அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று கூட கூறலாம்.
அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அவற்றை அறிவிப்புகள் என்று சொல்லாமல், அதிர்ச்சிகள் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் அறிவிப்புகள் அமெரிக்காவை மட்டுமல்ல… உலக நாடுகள் அனைத்தையுமே ஏதோ ஒருவிதத்தில் பாதித்துகொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில், ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் அறிவிப்பு, “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட்’.
ஆஹா… பெயரிலேயே ‘பியூட்டிஃபுல்’ இருக்கிறது என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். இதில் இந்தியர்களுக்கு கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது.

> 30,000 – 80,000 டாலர்கள் சம்பாதிக்கும் அமெரிக்கர்களுக்கு அவர்கள் கட்டும் வரியில் இருந்து கிட்டதட்ட 15 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
> டிப்ஸ் மற்றும் ஓவர் டைம் மூலம் சம்பாதிக்கும் பணங்களுக்கு இனி வரி கிடையாது.
> வரி கட்டும் மக்களின் நிதியில் இருந்து அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் இனி சட்ட விரோதமாக குடியேறிய மக்களுக்கு கிடைக்காது.
> இனி அமெரிக்கா குடியுரிமை வைத்திருக்கும் மக்கள் மற்றும் அமெரிக்க மக்கள் அமெரிக்காவை தாண்டி வேறு நாடுகளுக்கு தங்களது பணத்தை அனுப்பினால், அவர்கள் அந்தப் பணத்திற்கான 5 சதவிகித வரியை தங்களது வங்கிக்கு செலுத்த வேண்டும். அந்த வங்கி காலாண்டிற்கு ஒருமுறை இந்த வரி பணத்தை அமெரிக்க கருவூலத்திற்கு செலுத்தும்.

