பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் மருந்துகளையும் குடியிருப்பாளர்களுக்கு விநியோகித்ததோடு, அவர்களின் தேவைகளையும் நேரடியாகப் பேசிக் கேட்டறிந்தனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிகள் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்புப் பணியை உறுதி செய்வதில் ராணுவம் மிக முக்கிய பங்கு வகித்தது, மேலும் அவர்கள் தற்போது எங்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்குகிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறோம்” என்று பெருமிதத்துடன் கூறினார்கள்.

