ஆனால், எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்த போதுதான் ஆட்டம் ஆரம்பமானது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தலைமையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் மீது முழுமூச்சாக போரில் இறங்கியது. தரைப்படை, வான்படை, கப்பல் படை என அனைத்து விதங்களிலும் தாக்குதலைத் தொடுத்தது.


