Last Updated:
விதவிதமாக பெயர்களை வைப்பதால் மட்டும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை மறுத்துவிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் வைப்பதால் மட்டும் அந்த பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமில்லை என்றாகிவிடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை சொந்தம் கொண்டாடும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் எல்லைப் பகுதிகள் சிலவற்றுக்கு சீன மற்றும் திபெத்திய மொழிகளில், சீனா பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இந்தியா, சீனாவின் வீணான, அபத்தமான முயற்சிகளை தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிடும் சீனாவின் முயற்சிகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விதவிதமாக பெயர்களை வைப்பதால் மட்டும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை மறுத்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா நாடனது சீன மற்றும் திபெத்திய பெயர்களை சூட்டியது. இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளை சீனா உரிமை கோரும் முயற்சியை நிராகரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது, மேலும் அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தியுள்ளது.
Arunachal Pradesh


