ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வட்டி விகிதங்களை EPFO நிர்ணயிக்கிறது. பணி ஓய்வு பெற்ற பிறகு EPF சப்ஸ்கிரைபர்களுக்கு வட்டியுடன் அவர்களின் தொகை கிடைக்கும். எனினும், இடையில் தேவை ஏற்படும் பட்சத்தில் தங்களுடைய PF அக்கவுண்டில் இருந்து பணத்தை முழுமையாகவோ அல்லது பாதி அளவு தொகையையோ அவர்களால் வித்ட்ரா செய்ய முடியும்.
எனவே, இந்தப் பதிவில் PF அக்கவுண்டில் இருந்து பணத்தை எப்படி வித்ட்ரா செய்வது என்பதற்கான படிப்படியான விளக்கத்தைப் பார்க்கலாம். எனினும், இந்த செயல்முறையை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை உறுதி செய்ய வேண்டும்.
உங்களுடைய UAN (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) ஆக்டிவாக இருக்க வேண்டும் மற்றும் ஆதார், PAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (5 வருட சேவைக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு மேல் வித்ட்ரா செய்யும் பட்சத்தில்) மற்றும் வங்கிக் கணக்குடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சரியான IFSC உடன்).
EPFO போர்ட்டலில் உங்களுடைய KYC விவரங்கள் வெரிஃபை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆன்லைனில் EPF வித்ட்ரா செய்வதற்கான படிகள்:
முதலில், https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற EPFO மெம்பர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்யவும். கேப்சாவை என்டர் செய்து ‘சைன்-இன்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
உங்களுடைய ஆதார், PAN மற்றும் வங்கி விவரங்கள் வெரிஃபை செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ‘மேனேஜ்’ > \’KYC\’-க்குச் செல்லவும்.
அடுத்து ‘ஆன்லைன் சர்வீசஸ்’ > ‘கிளைம் (ஃபார்ம் – 31, 19, 10C & 10D)\’-க்குச் செல்லவும்.
இப்போது உங்களுடைய வங்கிக் கணக்கு எண் காண்பிக்கப்படும். வெரிஃபை செய்வதற்கு மீண்டும் அதை என்டர் செய்து ‘வெரிஃபை’ என்பதைக் கிளிக் செய்து மேலும் தொடருங்கள்.
முழுமையான தொகையைப் பெறுவதற்கு ‘ஒன்லி PF வித்டிராயல் (ஃபார்ம் 19)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பொருந்தக்கூடிய பட்சத்தில், ‘பென்ஷன் வித்டிராயல் (ஃபார்ம் 10C)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு ‘அட்வான்ஸ்/பார்ஷியல் வித்டிராயல் (ஃபார்ம் 31)’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பணத்தை வித்டிரா செய்வதற்கான காரணம் மற்றும் பிற விவரங்களை என்டர் செய்யவும்.
தேவை ஏற்பட்டால் மருத்துவமனை ரசீதுகள் போன்ற ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமென்ட்களை அப்லோடு செய்யுங்கள்.
’சப்மிட்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள். வழக்கமாக உங்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுவதற்கு 5 முதல் 20 வேலை நாட்கள் ஆகும்.
Read More