இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள். உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியா. இவர்களின் புனித தலமான மெக்கா இருக்கும் சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.


