• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சேதமடைந்த பாகிஸ்தான் தளங்கள்..! ஆதாரத்தை அதிரடியாக வெளியிட்ட இந்தியா

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
சேதமடைந்த பாகிஸ்தான் தளங்கள்..! ஆதாரத்தை அதிரடியாக வெளியிட்ட இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 15, 2025 7:09 AM IST

இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.

சேதமடைந்த பகுதிகள்சேதமடைந்த பகுதிகள்
சேதமடைந்த பகுதிகள்

இந்தியாவின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் சின்னாபின்னமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகி உள்ளன.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது. இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை வெற்றிகரமாக வீழ்த்திய இந்தியா, பதில் தாக்குதலையும் நடத்தியது.

ஆனால் இந்தியாவின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு கவசமான எஸ்-400-ஐ தாங்கள் தாக்கி விட்டோம் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்களுக்கு இந்த தாக்குதல் மூலம் பாதிப்பு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்தது. இதனையடுத்து இந்தியாவின் பாதுகாப்பு கவசமான எஸ்-400 பாதிக்கப்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இந்த நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 13 விமானப்படை தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகி உள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானின் சர்கோடா விமானப்படை தளத்தில் இரண்டு விமான ஓடுபாதையை இந்தியா அழித்துள்ளது. இதே போன்று, ரஹிம் யார்கான் விமானப்படை தளத்தின் ஓடுபாதையை இந்தியா தாக்கியதில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பஸ்ரூர் விமானப்படை தளத்தில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பையும் இந்தியா துவம்சம் செய்துள்ளது. இதே போன்று, ஜகோபாபாத், சுக்குர், போலாரி போஸ் உள்ளிட்ட விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியது. நூர் கான் என்ற இடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை இந்தியா தாக்கிய பிறகே, பாகிஸ்தான் சண்டை நிறுத்ததிற்கு முன்வந்ததும் தெரியவந்துள்ளது.

Read More

Previous Post

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய விலை என்ன தெரியுமா? இன்றைய விலை என்ன தெரியுமா?

Next Post

‘தமிழர் புலப்பெயர்வு’- நூல் வெளியீட்டு விழா

Next Post
‘தமிழர் புலப்பெயர்வு’- நூல் வெளியீட்டு விழா

‘தமிழர் புலப்பெயர்வு’- நூல் வெளியீட்டு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin