• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜாயின்ட் லோனில் துணை விண்ணப்பதாரராக இருப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா…? உண்மை என்ன…?

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜாயின்ட் லோனில் துணை விண்ணப்பதாரராக இருப்பது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா…? உண்மை என்ன…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால், முதலில் ஒரு ஜாயின்ட் லோனுக்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு ஜாயின்ட் லோன் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது நீங்கள் முதன்மை கடன் பெறுபவராக இருந்தாலும் சரி அல்லது துணை விண்ணப்பதாரராக இருந்தாலும் சரி. இருவருக்கும் பொருந்தும்.

எதற்காக ஜாயின்ட் லோனை எடுக்க வேண்டும்?

ஒரு தனிநபர் பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு கடனை வாங்குவதற்கு துணை விண்ணப்பதாரரை சேர்க்க வேண்டும்.

குறைவான கிரெடிட் ஸ்கோர்:

பொதுவாக ஒரு கடனை அங்கீகரிப்பதற்கு குறைந்தபட்சம் 750 அல்லது அதற்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோரை வங்கிகள் எதிர்பார்க்கின்றன. ஒருவேளை உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட துணை விண்ணப்பதாரரைப் பெறுவது உங்களுடைய கடனை எளிமையாக அங்கீகரிப்பதற்கு உதவும்.

அதிக கடன்-வருமான விகிதம்:

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வரம்பில் அதிகபட்ச தொகையை நீங்கள் கடன்களாகவும், கிரெடிட் கார்டு பில்களாகவும் பெற்றுள்ள பட்சத்தில், துணை விண்ணப்பதாரர் தேவைப்படலாம். ஏனெனில், அதிக கடன் வருமான விகிதம் இருப்பதால் உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

குறைந்த வருமானம்:

கடன் கொடுப்பதற்கு முன்பு உங்களுடைய மாத வருமானத்தை வங்கிகள் கருத்தில் கொள்வார்கள். ஒருவேளை அவர்களுடைய எதிர்பார்ப்பை விட உங்களுடைய வருமானம் குறைவாக இருந்தால் நிலையான வருமானம் கொண்ட ஒரு துணை விண்ணப்பதாரரை நீங்கள் உங்களுடைய கடன் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஜாயின்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது என்ன செயல்முறை நடைபெறுகிறது?

ஒரு கடனுக்கு நீங்கள் இருவராக சேர்ந்து விண்ணப்பிக்கும்போது, முதலில் இரண்டு விண்ணப்பதாரர்களின் கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் பொருளாதார வரலாற்றை வங்கிகள் சரிபார்க்கும். இதற்கு முன்பு செலுத்தப்படாமல் இருந்த பேமென்ட்கள், தாமதமாக செலுத்தப்பட்ட பேமென்ட் அல்லது மூடப்படாமல் செட்டில் செயல்பட்ட லோன்கள் ஆகியவை இதில் அடங்கும். இரண்டு விண்ணப்பதாரர்களுக்கும் கணிசமான கடன் வரலாறு இருந்தால் மட்டுமே கடன் அங்கீகரிக்கப்படும்.

ஜாயின்ட் லோன் எடுப்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா?

ஜாயின்ட் லோன் எடுப்பது இருவருக்கும் நன்மை மற்றும் தீமையை கொண்டு வரலாம். இது உங்களுடைய EMIகளை நீங்கள் எவ்வாறு செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும். ஒவ்வொரு முறையும் EMI தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் பட்சத்தில் இரண்டு கடன் பெறுநர்களுக்கும் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும்.

ஆனால், ஒருவேளை முதன்மை கடன் பெற்றவர் EMI தொகையை சரியான நேரத்தில் செலுத்த தவறினால் துணை விண்ணப்பதாரர் அதனை செலுத்த வேண்டும். இரண்டு நபரும் செலுத்தாத பட்சத்தில் அந்த பேமென்ட் தாமதமாக செலுத்தப்பட்டது அல்லது தவறவிடப்பட்ட பேமென்டாக கருதப்பட்டு இருவருடைய கிரெடிட் ஸ்கோரையும் அது பாதிக்கலாம். ஒருவேளை 90 நாட்களுக்கு மேலாக நீங்கள் பேமென்ட்டை செலுத்தாத பட்சத்தில் அதன் தாக்கம் உங்களுடைய கிரெடிட் வரலாற்றில் 7 வருடங்கள் வரை நீடிக்கும்.

துணை விண்ணப்பதாரராக இருக்க ஒப்புக் கொள்வது சரியா?

ஒருவேளை உங்களுடைய குடும்பத்தில் ஒருவர் உங்களை துணை விண்ணப்பதாரராக கையெழுத்திடும்படி கேட்டால், அதற்கு சரி என்று சொல்வதற்கு முன்பு ஒருமுறை யோசித்துக் கொள்வது நல்லது. நன்மையைப் பற்றி பேசும்போது, பேமென்ட்களை சரியான முறையில் செலுத்திவிட்டால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும். ஆனால், இதுவே பேமென்ட்களை தவறவிட்டால் அந்தப் பொறுப்பு உங்கள் தலைமீது விடியலாம். அது மட்டுமல்லாமல் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்.

Read More

Previous Post

“புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” – தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம் | Grand Tiranga Shaurya Samman Yatra held in Uttarakhand

Next Post

‘அசாமின் ஒப்பந்த நீட்டிப்பு அன்வாரின் அரசாங்கத்தைப் பற்றி மோசமாகப் பேசுகிறது’ – Malaysiakini

Next Post
‘அசாமின் ஒப்பந்த நீட்டிப்பு அன்வாரின் அரசாங்கத்தைப் பற்றி மோசமாகப் பேசுகிறது’ – Malaysiakini

‘அசாமின் ஒப்பந்த நீட்டிப்பு அன்வாரின் அரசாங்கத்தைப் பற்றி மோசமாகப் பேசுகிறது’ – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin