யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் நிறுவனம் பதஞ்சலி . இந்நிறுவனம் உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
மருத்துவ அடிப்படையிலான மருந்துகளை என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று கேள்வி எழுப்பியது.
உச்சநீதிமன்றம் எச்சரித்தும் இதே பாணியில் விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான நீதிபதிகள் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த சூழலில் பத்திரிகைகளில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ஹிமா கோலி, அசனுதீன் அமனுல்லா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிபதிகள் முன்பு ராம்தேவ் நேரில் வந்து மன்னிப்பு கோரியதாக குறிப்பிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். இதேபோல் நீதிபதிகளை மட்டும் பதஞ்சலி நிறுவனம் அவமதிக்கவில்லை அதேநேரம் ஒட்டுமொத்த நீதித்துறையையே அவமதிப்பதாக தெரிவித்தனர்.
பாபா ராம்தேவை சாதாரண பொதுமக்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், பதஞ்சலிக்கு பாடம் எடுக்க தயாராக இல்லை என்று காட்டமாக தெரிவித்தனர்.
உண்மைக்கு புறம்பான விளம்பரங்களை வெளியிட்ட நிலையில் அது தொடர்பான வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. பாபா ராம்தேவ் நிறைய யோகாசனங்கள் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக பிற மருத்துவ முறைகளை அவர் அலட்சியப்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)