Last Updated:
டாக்டர் சாருலதா மோனிகா தேவேந்திரன், ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் முதல் தமிழ் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் மேயராக டாக்டர் சாருலதா மோனிகா தேவேந்திரன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் சாருலதா மோனிகா தேவேந்திரன், இந்தியாவில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜெர்மனியில் சந்தைப்படுத்தல், தொடர்பு, மனித வளங்கள், சர்வதேச வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் MBA பட்டம் பெற்றார்.
இதையடுத்து லண்டன் பொதுப் பேச்சு கல்லூரியில் படித்த இவர், சமூக சேவையாற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி உழைத்து வந்தார். மேலும் இங்கிலாந்தில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்து செயலாற்றினார். இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டில் ஏம்ஸ்பரி டவுனில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2022ஆம் ஆண்டு துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் மேயராக டாக்டர் மோனிகா தேவேந்திரன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் தமிழ் வம்சாவழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மேயரும் இவரே ஆவார்.
இதுமட்டுமின்றி வில்ட்ஷயர் கவுன்சிலின் சுகாதாரத்துறை தேர்வுக் குழுவில் அமெஸ்பரியின் பிரதிநிதியாகவும் டாக்டர் மோனிகா தேவேந்திரன் உள்ளார்.


