அதன்படி, இணையத் தாக்குதலுக்கு மால்வோ், அனுமதிக்கப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல் (டிடிஓஎஸ்) முறை, ஜிபிஎஸ் மோசடி உள்ளிட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையத் தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானைச் சோ்ந்த ஏபிடி36, பாகிஸ்தான் இணையப் படை (சைபா் ஃபோா்ஸ்), டீம் இன்சேன் பி.கே., மிஸ்டீரியஸ் பங்களாதேஷ், இந்தோ ஹேக்ஸ் செக், இணையக் குழு ஹோவேக்ஸ் 1337, தேசிய இணையக் குழு (பாகிஸ்தான் கூட்டுறவு) உள்ளிட்ட 7 ஏபிடி குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 7 குழுக்களும் ஒட்டுமொத்தமாக நடத்திய 15 லட்சம் இணையத் தாக்குதலில், குலேகான் பதல்பூா் நகராட்சி கவுன்சில் வலைதளம் உள்பட 150 இணையத் தாக்குதல்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மற்ற முயற்சிகள்அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.

