• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கராச்சியின் Malir Cantt ராணுவ தளத்தை தாக்க முயற்சி… பாகிஸ்தானுக்குள் 150 கி.மீ.க்கு மேல் சென்ற இந்தியா…!

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கராச்சியின் Malir Cantt ராணுவ தளத்தை தாக்க முயற்சி… பாகிஸ்தானுக்குள் 150 கி.மீ.க்கு மேல் சென்ற இந்தியா…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 13, 2025 7:42 PM IST

கராச்சியில் உள்ள Malir Cantt-ஐ தாக்க இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்திய விமானப்படையின் (IAF) செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் AK பாரதி, பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Malir Cantt-ல் இலக்குகள் மீது IAF தாக்குதல்களை நடத்தியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த குறிப்பிட்ட பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் பதிலடி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். கராச்சியில் உள்ள Malir Cantt-ஐ தாக்க இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இலக்குகளை ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய விமானப்படை தாக்கியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்குப் பிறகு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகத் தொடங்கப்பட்ட எதிர் தாக்குதலின் ஒரு பகுதியான இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் மிக உறுதியாக, சிறப்பாக இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

IAF அளித்த தகவல்களின்படி இந்தியாவில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இலக்குகளில் சக்லாலா, ரஃபிக் மற்றும் ரஹீம் யார் கான் ஆகிய இடங்களில் உள்ள அந்நாட்டின் விமானப்படை தளங்களும், அதைத் தொடர்ந்து சர்கோதா, புலரி மற்றும் ஜகோபாபாத் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்திய விமானப்படை (IAF) தனது எக்ஸ் போஸ்ட் ஒன்றில், “ஆபரேஷன் சிந்தூரில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக, வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். பாதுகாப்பு நோக்கங்களுடன் இணைந்து, விவேகமான முறையில் இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உரிய நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். அதுவரை சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதையும் தவிர்க்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என IAF குறிப்பிட்டிருந்தது.

அதேபோல ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்களின்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களை இந்திய விமானப்படை (IAF) வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தளம் மற்றும் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டை உள்ளிட்ட முக்கிய இலக்குகள் தாக்குதலுக்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க படங்கள் உதவுகின்றன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் ராணுவ விமான நிலையங்கள் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதல்களின் தாக்கத்தையும் அந்தக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதாக IAF தெரிவித்துள்ளது.

இந்த மல்டி-டைமன்ஷனல் நடவடிக்கையானது பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக அமைதியாக்கியது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தியது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வலுப்படுத்தி இருக்கிறது என்றும் ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கராச்சியின் Malir Cantt ராணுவ தளத்தை தாக்க முயற்சி… பாகிஸ்தானுக்குள் 150 கி.மீ.க்கு மேல் சென்ற இந்தியா…!

Read More

Previous Post

Tamilmirror Online || கல்கிசை துப்பாக்கிச் சூடு: இருவர் கைது

Next Post

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

Next Post
அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin