Last Updated:
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல், ஜவுளித்துறை மற்றும் ஐடி துறைகள் ஜிஎஸ்டி வருவாய்க்கு முக்கிய காரணமும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் அதிக வருவாய் கிடைக்கும் இந்தியாவின் டாப் 10 மாநிலங்கள் குறித்து பார்க்கலாம். இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஏப்ரல் 2025 ஒரே மாதத்தில் பெறப்பட்ட ஜிஎஸ்டி வசூலின் அடிப்படையில் 41 ஆயிரத்து 645 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று மகாராஷ்டிரா பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. இங்கு ரூ. 17 ஆயிரத்து 815 கோடி வசூல் ஏப்ரல் மாதத்தில் கிடைத்துள்ளது. ஐடி நிறுவனங்கள், பயோ டெக்னாலஜி மற்றும் உற்பத்தி துறை நிறுவனங்கள் ஏராளமான பெங்களூரில் உள்ளன. இவை அதிக வரி வருமானத்தை வழங்குகின்றன.
குஜராத் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு ஏப்ரல் மாதம் 14 ஆயிரத்து 970 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. துறைமுகங்கள், பெட்ரோல் கெமிக்கல் மற்றும் ஜவுளித்துறை நிறுவனங்கள் இதற்கு முக்கிய காரணம். அரியானா மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு ஏப்ரல் மாதத்தில் 14 ஆயிரத்து 57 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. உற்பத்தி துறை, ஆட்டோமொபைல் மற்றும் வேளாண்மை சார்ந்த நிறுவனங்கள் இதற்கு முக்கிய காரணம்.
உத்தர பிரதேசத்தில் ஜிஎஸ்டி வசூல் 13 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உள்ளது. மிக அதிக மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழில்துறை பொருளாதாரம், அனைத்து துறை நுகர்வு ஆகியவை இந்த வசூலுக்கு அடிப்படையாக உள்ளன.
ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு ஏப்ரல் மாதத்தில் 13 ஆயிரத்து 831 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல், ஜவுளித்துறை மற்றும் ஐடி துறைகள் இதற்கு முக்கிய காரணமும்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மேற்கு வங்கம் ரூ. 8,188 கோடியுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லி ரூ. 8,260 கோடி ரூபாய் வசூலுடன் எட்டாவது இடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் ரூ. 6228 கோடி ரூபாய் வசூலுடன் 9-ஆவது இடத்திலும், தெலுங்கானா மாநிலம் பத்தாவது இடத்திலும் உள்ளன.


