• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இன்ஃபோசிஸில் தனது கேரியரைத் தொடங்கிய பெண்… இன்று யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்…!

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இன்ஃபோசிஸில் தனது கேரியரைத் தொடங்கிய பெண்… இன்று யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக குஞ்சன் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் இந்தியாவில் யூடியூப்பின் வளர்ச்சி மற்றும் புதுமை முயற்சிகளுக்கு சோனி தலைமை தாங்க உள்ளார். யூடியூப்பில் சேர்வதற்கு முன்பு, சலோரா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் சோனி.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் குழு தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். வணிகம், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் மின் வணிகம் ஆகியவற்றில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான தலைமைத்துவ அனுபவத்தைக் கொண்டுள்ள சோனி, ஒரு மென்பொருள் பொறியாளராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார்.

படிப்பை முடித்ததும் முதல் வேலையாக நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தனது லிங்க்டின் சுயவிவரத்தின்படி, 2000 முதல் 2001 வரை சுமார் ஒரு வருடம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றினார் சோனி.

தனது புதிய பதவி குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சோனி, “இந்த துடிப்பான குழுவில் சேர்ந்து, திறமையின் சக்தி மையமாக திகழும் இந்திய படைப்பாளி (கன்டன்ட் கிரியேட்டர்) பொருளாதாரத்தை நீண்ட காலமாக ஆதரித்துவரும் ஒரு தளத்தை வழிநடத்துவதில் நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார்.

இந்திய ஊடக மற்றும் சந்தைப்படுத்தலில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்டுள்ள சோனி, ஸ்டார் இந்தியாவில் EVP ஆகவும், மைந்த்ராவில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு, அவர் மெக்கின்சியில் நுகர்வோர் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறையில் ஒரு பங்குதாரராக இருந்தார். மேலும், இவர் ஃபார்ச்சூன் 500 நிறுவனமான CBRE குழுமத்தின் குழுவில் பணியாற்றியுள்ளார். கல்வியைப் பொறுத்தவரை, போபாலில் உள்ள பர்கத்துல்லா விஸ்வ வித்யாலயாவிலிருந்து கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து XLRI ஜாம்ஷெட்பூரில் இருந்து நிதித்துறையில் எம்பிஏ பட்டம் பெற்றார். அவரது முந்தைய பணி அனுபவங்களைப் பற்றி பார்த்தோமென்றால், ஸ்டார் இந்தியா (21 செஞ்சுரி ஃபாக்ஸ் துணை நிறுவனம்) நிறுவனத்தின் திட்டம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கான நிர்வாக துணைத் தலைவர் மற்றும் நுகர்வோர் மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறையில் மெக்கின்சியில் கூட்டாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மைந்த்ரா நிறுவனத்தில், மைந்த்ரா தளம் மற்றும் ஃபேஷன் பிராண்டுகளுக்கான சந்தைப்படுத்தலுக்கும், ஜபாங் வணிகத்திற்கான லாப நஷ்டத்தை நிர்வகிப்பதற்கும் அவர் பொறுப்பேற்றார். அவரது தொழில்முறை வாழ்க்கையைத் தாண்டி, அறிவியல் புனைகதை மற்றும் ஃபேண்டஸி கதைகளுக்கு அவர் பெரிய ரசிகை. கேப்டன் பிகார்டுடன் மற்றும் ஸ்டார் ட்ரெக் தொடர் அவருக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

இன்ஃபோசிஸில் தனது கேரியரைத் தொடங்கிய பெண்… இன்று யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர்…!

Read More

Previous Post

விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஒருநாள் எதிர்காலம்.. முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து

Next Post

சமூக சேவகி கல்வியாளர் இராசம்மா பூபாலன் காலமானார் – Malaysiakini

Next Post
சமூக சேவகி கல்வியாளர் இராசம்மா பூபாலன் காலமானார் – Malaysiakini

சமூக சேவகி கல்வியாளர் இராசம்மா பூபாலன் காலமானார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin