Singapore: சாலைகளில் பொருத்தப்பட்ட கேமராக்களை பயன்படுத்தி மின்னணு சாலை (ERP) கட்டணங்களைக் கணக்கிடும் திட்டம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் கேமராக்கள் மற்றும் வாகன உரிமை எண்ணை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் ERP கட்டணம் கணக்கிடப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஊழியர் கைது
இந்த சோதனை முறை கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு அக்டோபர் வரை நீடிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சோதனை முறை இன்னும் ஆய்வு நிலையில் உள்ளதால் இதனை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
பொது மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தை உருவாக்கும் அரசாங்க தொழிற்நுட்ப அமைப்பின் சுயேச்சை பிரிவான OGP, ஆண்டுதோறும் “ஹேக்கத்தான்” என்னும் பொது நன்மைக்கான திட்டங்களை உருவாக்கும். அது உருவாக்கிய 35 திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ERP X சோதனைத் திட்டத்தின் கீழ், பிராஸ் பாசா பகுதியில் பல்வேறு இடங்களில் ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கேமராக்கள் வாகன உரிமை எண்களை தானாகவே அடையாளம் காணும், மேலும் சுங்கக் கட்டணங்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு தானாகவே அனுப்பப்படுகிறது.
இதற்கு நேர்மாறாக, தற்போதைய ERP முறையின்கீழ் வாகனங்களில் நிறுவப்பட்ட வன்பொருள் மூலம் ERP கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன.
இந்த கேமரா தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்களைச் சேகரிப்பதே இந்த சோதனையின் நோக்கம் என்றும், இந்த சோதனையில் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் (LTA) இணைந்து பணியாற்றி வருவதாகவும் OGP செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்யிடம் தெரிவித்தார்.
இதனை பெரிய அளவில் செயல்படுத்த இன்னும் கூடுதலான மேம்பாட்டு பணிகளும், சோதனைகளும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு
The post சிங்கப்பூரில் கேமராக்களை பயன்படுத்தி ERP கட்டணம்… நடைமுறைக்கு வருமா? appeared first on Tamil Daily Singapore.

