• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“நீங்கள் ஒரு போதும் காட்டாத கண்ணீர்” விராட் கோலி ஓய்வு குறித்து அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“நீங்கள் ஒரு போதும் காட்டாத கண்ணீர்” விராட் கோலி ஓய்வு குறித்து அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2025 7:03 PM IST

Virat Kohli : விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 46.85 ரன்களுடன் மொத்தம் 9,230 ரன்களை விளாசியுள்ளார்.

அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலிஅனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி
அனுஷ்கா சர்மா உடன் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று (மே 12) அறிவித்துள்ளார். அவரது ஓய்வுக்கு பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகையாக அனுஷ்கா சர்மா இருந்து வருகிறார். மைதானங்களில் பல முறை அவரை உற்சாகப்படுத்தி கிரிக்கெட்டில் பல சாதனைகளை அடைய அனுஷ்கா சர்மாவும் உத்வேகப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்து அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, “மக்கள் சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் காட்டாத கண்ணீர், யாரும் பார்க்காத சண்டைகள் மற்றும் விளையாட்டு மீதான உங்கள் தீராத அன்பு ஆகியவற்றை நான் நினைவில் கொள்வேன்” என்றுள்ளார்.

மேலும், “இதெல்லாம் உங்களிடமிருந்து எவ்வளவு எடுத்தது என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும், நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்தீர்கள். இந்த பயணத்தில் நீங்கள் வளர்வதைப் பார்ப்பது ஒரு பாக்கியம்.  நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தைப் பின்பற்றினீர்கள், எனவே என் அன்பே, இந்த பிரியாவிடையின் ஒவ்வொரு துளியையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.” என்றுள்ளார்.

இந்த பதிவிற்கு அனுஷ்கா சர்மா ஒரு அழகான புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்ற அந்தப் போட்டியின் படம் இது. படத்தின் பின்னணியில் உள்ள பலகையிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.

முன்னதாக, விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்த முடிவை எடுப்பது கடினம் என்றும், ஆனால் இப்போது சரியான நேரம் என்று உணர்ந்ததாகவும் அவர் எழுதினார். கோஹ்லி தனது சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைவில் கொள்வேன் என்று அவர் கூறினார்.

விராட் கோலி இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 46.85 ரன்களுடன் மொத்தம் 9,230 ரன்களை விளாசியுள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடக்கம்.

Location :

Chennai,Tamil Nadu

Read More

Previous Post

மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்

Next Post

குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும்போது தகராறு: 3 பெண்கள் சுட்டுக்கொலை – வாலிபர் வெறிச்செயல் | Makkal Osai

Next Post
குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும்போது தகராறு: 3 பெண்கள் சுட்டுக்கொலை – வாலிபர் வெறிச்செயல் | Makkal Osai

குறுகிய பாதையில் வாகனத்தில் செல்லும்போது தகராறு: 3 பெண்கள் சுட்டுக்கொலை - வாலிபர் வெறிச்செயல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin