மே 2022 முதல் முக்கியமான வட்டி விகிதங்களில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் இருந்து வருவதால், ஏப்ரல்-ஜூன் 2024 சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அரசு எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.
எனவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்களை இப்பொழுது பார்க்கலாம்:
ஏப்ரல் ஜூன் 2024 காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது :
சேவிங்ஸ் டெபாசிட் : 4 சதவீதம்
1- வருட போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்
2- வருட போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்
3-வருட போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்கள்: 7.1 சதவீதம்
5-வருட போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்கள்: 7.5 சதவீதம்
5- வருட ரெக்கரிங் டெபாசிட்டுகள்: 6.7 சதவீதம்
நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) : 7.7 சதவீதம்
கிசான் விகாஸ் பத்திரம்: 7.5 சதவீதம் (115 மாதங்களில் மெச்சூரிட்டி ஆகக்கூடியது)
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்: 7.1 சதவீதம்
சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட்: 8.2 சதவீதம்
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம்: 8.2 சதவீதம்
மந்த்லி இன்கம் அக்கவுண்ட்: 7.4 சதவீதம்.
வங்கி ஃபிக்சட் டெபாசிட்டுகள் வழங்கி வரும் வட்டி விகிதங்கள் :
தற்போது முன்னணி வங்கிகள் டெபாசிட் கால அளவு மற்றும் டெபாசிட் செய்யும் நபரின் வயதை கருத்தில் கொண்டு 7.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில சேமிப்பு திட்டங்களுக்கு 8.2% வட்டி கூட வழங்கப்படுகிறது.
HDFC வங்கியானது ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.75 சதவீத வட்டி கொடுக்கிறது. ICICI வங்கி ஒரு ஆண்டுக்கு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 7.60 சதவீத வட்டியை வழங்குகிறது, அதுவே SBI ஒரு ஆண்டுக்கு 7.50 வட்டியை தருகிறது.
சிறுசேமிப்பு திட்டங்கள் என்றால் என்ன?
குடிமக்களை வழக்கமான முறையில் சேமிப்பதை ஊக்குவிப்பதற்காக அரசு நிர்வகித்து வரும் சேமிப்பு கருவிகளே சிறுசேமிப்பு திட்டங்கள். இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் மூன்று பிரிவுகளின் கீழ் அடங்கும் . சேவிங்ஸ் டெபாசிட்டுகள் சோஷியல் செக்யூரிட்டி திட்டங்கள் மற்றும் மன்த்லி இன்கம் திட்டம்.
சேவிங்ஸ் டெபாசிட்டுகளில் 1-3- வருட டைம் டெபாசிட் மற்றும் 5- வருட ரெக்கரிங் டெபாசிட்கள அடங்கும். இதில் நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற திட்டங்கள் உள்ளன. சோஷியல் செக்யூரிட்டி திட்டங்களில் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் உள்ளது. இதுவே மந்த்லி இன்கம் திட்டத்தில் மந்த்லி இன்கம் அக்கவுண்ட் உள்ளது.
இதையும் படிங்க : பெண்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த திட்டத்துல சேமித்தால் டபுள் மடங்கு லாபம்!
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட், நேஷனல் சேவிங் சர்டிபிகேட் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. PPF, NSC, முதலியன போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போது சந்தையுடன் தொடர்புடையதாக அமைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)