ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் காலாவதியான ராணுவ ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட வெடிப்பில், 13 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாநிலத்தில் திங்கட்கிழமை (மே 12) இச்சம்பவம் நிகழ்ந்தது.
இது, ஓராண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் இந்தோனேசியாவில் காலாவதியான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவமாகும்.
உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் பொதுமக்கள், நால்வர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கிறிஸ்டொமெய் சியான்டூரி கம்பஸ் டிவி ஊடகத்திடம் தெரிவித்தார்.
வெடிப்புக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய இராணுவம் விசாரணை நடத்திவருவதாக அவர் கூறினார்.


