இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே பஞ்சாப்பில் நடந்த போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பதற்ற நிலை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்தியா நடத்திய 3 நாட்கள் அதிரடி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பணிந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் காணப்படும் பதற்ற நிலை தணியத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலின்படி போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை
ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை அனைத்தும் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். மீதம் உள்ள போட்டிகளில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
பஞ்சாப் – டெல்லி மேட்ச்
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ளே ஆஃப் சுற்றை பொருத்தவரையில்
குவாலிபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிபையர் 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது..
டபுள் ஹெடர்
மே 18 மற்றும் மே 25 ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஒரேயொரு போட்டி நடத்தப்படும்.
ஐபிஎல் புதிய அட்டவணை பின்வருமாறு
ஐபிஎல் புதிய அட்டவணை
May 12, 2025 10:33 PM IST

