இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று கூறியிருந்தார்.
மேலும், நேர்காணல் ஒன்றில், “இரு நாடுகளுடனும் நல்ல நட்பு இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
பழிக்குப் பழி தீர்க்கப்பட்டது. இனி இருவரும் அனைத்தையும் நிறுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.

தற்போது, “பாகிஸ்தானும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லையெனில் வணிகம் இல்லை என நான் விடுத்த எச்சரிக்கையால்தான், இரு நாடுகளும் உடனே சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தன.
இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா அதிகமாக வணிகம் செய்ய உள்ளது. அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்பு இருந்த நிலையை அதைத் தடுத்து நிறுத்திருக்கிறது அமெரிக்கா” என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

